Human rights or civil liberties form a crucial part of a country's constitution and govern the rights of the individual against the state. |
ஒவ்வொரு நாட்டின் அரசியல் சாசனத்தின் மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். அந்தந்த அரசில் ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கும் உரிமைகள் அதன் மூலம் உறுதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. |
Most jurisdictions, like the United States and France, have a codified constitution, with a bill of rights. |
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதை ஒரு சட்டத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் இணைத்து உறுதி செய்துள்ளது |
A recent example is the Charter of Fundamental Rights of the European Union which was intended to be included in the Treaty establishing a Constitution for Europe, that failed to be ratified. |
இதற்கான அண்மைய உதாரணம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அடிப்படை உரிமைகள் கோட்பாடாகும். எனினும் ஐரோப்பாவுக்கான அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கி இந்த உரிமைகளை அதில் உள்வாங்கும் முன்னெடுப்புக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. |
Perhaps the most important example is the Universal Declaration of Human Rights under the UN Charter. |
இதற்கான மிக முக்கிய உதாரணமாக கருதப்படுவது ஐ நாவின் கொள்கை பிரகடனத்தில் மனித உரிமைகள் முக்கியமானவை என்று பன்னாட்டு ரீதியில் அறிவிக்கப்பட்டதாகும். |
These are intended to ensure basic political, social and economic standards that a nation state, or intergovernmental body is obliged to provide to its citizens but many do include its governments. |
இதன் மூலம் அரசியல், சமூக மற்றும் பொருளாதார தகுதி நிலைகளை ஒரு அரசு அல்லது பன்னாட்டு அரசமைப்பு ஆகியாஇ தமது குடிமக்களுகு அளிப்பதை ஒரு கடப்பாடாக்குவதை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி அந்தப் பன்னாட்டு அரசமைப்புகள் இதை தமது நாடுகளில் அமல் செய்யப்படுவதையும் உறுதி செய்யும். |
Some countries like the United Kingdom have no entrenched document setting out fundamental rights; in those jurisdictions the constitution is composed of statute, case law and convention. |
பிரிட்டன் போன்ற நாடுகளில் அடிப்படை உரிமைகளை விளக்கி வலியுறுத்தும் ஆவணங்கள் ஏதுமில்லை. அப்படியான நாடுகளின் அரசியல் சாசனத்தின் வழக்குச் சட்டம், மரபுகள் மற்றும் விதிகளில் அவை உள்ளன. |
A case named Entick v. Carrington is a constitutional principle deriving from the common law. |
எண்டிக் எதிராக காரிங்டன் என்றழைக்கப்படும் வழக்கு பொதுச் சட்டத்தின் மூலங்களில் இருந்து அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட்ட கொள்கையாகும். |
John Entick's house was searched and ransacked by Sherriff Carrington. |
ஜான் எண்டிக்கின் இல்லம் ஷெரீஃப் கார்ங்டனால் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டு சூரையாடப்பட்டது |
Carrington argued that a warrant from a Government minister, the Earl of Halifax was valid authority, even though there was no statutory provision or court order for it. |
அரச அமைச்சரான, ஹாலிஃபாக் கோமான் அவர்களிடமிருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவொனது அதிகாரப்பூர்வமான உத்தரவு என்று காரிங்டன் வாதிட்டார். எனினும் அதற்கான சட்ட விதிமுறைகளோ அல்லது நீதிமன்ற உத்தரவோ இருக்கவில்லை. |
The court, led by Lord Camden stated that, |
காம்டென் பிரபு தலைமையிலான நீதிமன்றமோ, |
"The great end, for which men entered into society, was to secure their property. That right is preserved sacred and incommunicable in all instances, where it has not been taken away or abridged by some public law for the good of the whole. By the laws of England, every invasion of private property, be it ever so minute, is a trespass... If no excuse can be found or produced, the silence of the books is an authority against the defendant, and the plaintiff must have judgment." |
``மக்கள் சமூகத்தில் நுழைந்ததே தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்கே. அந்த உரிமை ஏதாவது பொதுச் சட்டத்தின் மூலம் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ மட்டுப்படுத்தப்படாதவரை புனிதமானதும் அனைத்துச் சந்தர்பங்களிலும் பிறருக்கு கூற முடியாததாகும். இங்கிலாந்தின் சட்டப்படி, ஒருவருடைய வீட்டில் வலிந்து நுழைவது-அது எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும்-அது அத்துமீறலாகும். இதற்கான காரணம் ஏதேனும் கண்டறியப்படாவிட்டாலோ அல்லது சமர்ப்பிக்கப்படாமல் இருந்தாலோ, சட்டப் புத்தகத்தில் இது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றாலோ அது பிரதிவாதிக்கு எதிரானதாகும், மேலும் வாதிக்கு நீதி கிடைக்க வேண்டும்`` என்று தெரிவித்தது |