Technology plays an increasingly significant role in improving access to education for people living in impoverished areas and developing countries. |
வறுமையில் இருக்கும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்குக் கல்வியை அணுகும் முறைகளைச் செம்மைப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. |
Charities like One Laptop per Child are dedicated to providing infrastructures through which the disadvantaged may access educational materials. |
ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி போன்ற சேவையின் மூலம் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டால்; வசதியற்றச் சூழலில் இருக்கும் குழந்தைகள் கல்வியின் அடிப்படைத் தேவைகளைப் பெற முடியும். |
The OLPC foundation, a group out of MIT Media Lab and supported by several major corporations, has a stated mission to develop a $100 laptop for delivering educational software. |
பல பொது ஸ்தாபனங்களால் ஆதரவு பெறும், எம் ஐ டி மீடியா லேப் (MIT Media Lab) ன் ஒரு குழுவான ஓ எல் பி ஸி (OLPC) நிறுவனம், கல்வி சம்பந்தப்பட்ட மென்பொருளை வழங்கும் அளவிற்கு 100 டாலர் மதிப்புள்ள மடிக்கணினிகளை மேம்படுத்தும் திட்டங்களை வரையறுத்து செயல்படுகிறது. |
The laptops were widely available as of 2008. |
2008 வருடத்திலிருந்து மடிக்கணினிகள் பரவலாகக் கிடைக்கின்றன. |
They are sold at cost or given away based on donations. |
அவை விற்கப்படுகின்றன அல்லது நன்கொடையாகவும் கொடுக்கப்படுகின்றன. |
In Africa, the New Partnership for Africa's Development (NEPAD) has launched an "e-school program" to provide all 600,000 primary and high schools with computer equipment, learning materials and internet access within 10 years. |
ஆப்பிரிக்காவில், கடந்த 10 ஆண்டுகளில், 600,000 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கணினிச் சாதனங்கள், கற்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் இணையத் தொடர்புகளை வழங்குவதற்காக ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான புதிய கூட்டுறவு (NEPAD), இணைய வழி பள்ளி செயல் திட்டத்தை - "e-School program" - தொடங்கியுள்ளது. |
An International Development Agency project called nabuur.com, started with the support of former American President Bill Clinton, uses the Internet to allow co-operation by individuals on issues of social development. |
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அவர்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட nabuur.com எனும் பன்னாட்டு வளர்ச்சி முகமையின் செயல்திட்டம்,, இணையத்தைப் பயன்படுத்தி சமூக வளர்ச்சிப் பிரச்சனைகளில் தனிநபர்களை ஒருங்கிணைத்து ஒத்துழைக்க வைக்கிறது. |
India is developing technologies that will bypass land-based telephone and Internet infrastructure to deliver distance learning directly to its students. |
தன் மாணாக்கர்களுக்குத் தொலைதூரக் கல்வி வழங்கிட, தரை வழி தொலைபேசி மற்றும் இணைய அடிப்படைவசதிகளுக்கு மாற்று வழி தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. |
In 2004, the Indian Space Research Organisation launched EDUSAT, a communications satellite providing access to educational materials that can reach more of the country's population at a greatly reduced cost. |
பெரும்பான்மை நாட்டு மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் கல்விக்கான அடிப்படை மூலப் பொருட்களை அணுகும் வகையில் 2004 ஆம் வருடம், இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO-Indian Space Research Organaisation) EDUSAT எனும் தொலைதொடர்பு செயற்கைக் கோளைச் செலுத்தியது. |